இந்தியா

3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

சோழவரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மளிகை கடை ஒன்றிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சிலர் வாங்கி வருவதை கண்டு மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட 3டன் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முருகன் மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

750 கிலோ குட்கா பறிமுதல்

கோவை தாமஸ் வீதியில் உள்ள கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் . அப்போது அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த

750 கிலோ குட்கா பாக்கெட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர் .

தொடர்ந்து கோவை ஒப்பணக்கார வீதி , ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்