இந்தியா

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினர், எல்லை பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் மாநில போலீசார் என கூட்டாக பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹந்துவாரா மாவட்டத்தில் உள்ள யாஹு பகுதியிலும் ராணுவத்தினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS