காட்டுமன்னார்கோவில் அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்திற்கும் அதிகமான மானவர்கள் படித்து வந்தனர். பின்னர் அந்த பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் இந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்கை குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்களே படித்து வருகின்றனர். மேலும் 7-ஆம் வகுப்பில் 5 மாணவர்களும், 8-ஆம் வகுப்பில் 20 மாணவர்களும் தான் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம், தனியார் பள்ளிகள் அதிகரிப்பா? அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததா? என்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.