இந்தியா

3 மணி நேர பேச்சுவார்த்தை.. கேரளாவில் களமிறங்கும் 2 பெரிய தலைகள்?.. வெளியாக போகும் பட்டியல்

தந்தி டிவி

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி, குஜராத்தில் இருந்ததால் காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் தேர்வு விவாதிக்கப்பட்டது. இதில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரத்திலும் மீண்டும் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்

Minister Sarathkumar | TVK | TN Assembly | CM Vijay | சட்டமன்றத்தை கதிகளங்கவிட்ட அமைச்சர் சரத்குமார்