இந்தியா

கர்நாடக அரசுக்கு ரூ.2,800 கோடி அபராதம்..! - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி...

தந்தி டிவி

கர்நாடக அரசுக்கு ரூ.2,800 கோடி அபராதம்..! - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி...

திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை நிர்வாகத்தில் தோல்வி அடைந்துள்ளதால் கர்நாடக அரசுக்கு, 2 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திட மற்றும் திரவ கழிவுகளை மேம்படுத்துவதில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த வழிமுறைகளை தேசிய பசுமை தீர்பாயம் வகுத்துள்ளன.

இந்த நிலையில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை நிர்வாகத்தில் கர்நாடக அரசு தோல்வி அடைந்ததால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால், திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016- ன் கீழ் கர்நாடக அரசுக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என மாநிலத்தை ஆளும் பாஜக அரசு குற்றம்சாட்டி இருந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்