இந்தியா

5 மாதத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை

2026 ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை

thanthitv

ஜனவரி தொடங்கி 5 மாதத்துக்குள்19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை- மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.

2026 ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல் படை தொகுத்துள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணயை தொடங்கி, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சகத்தின் உள்துறை செயலாளருக்கும், சிஆர்பிஎப் இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல் படை தொகுத்துள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்தி தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணயை தொடங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

.

சிஆர்பிஎப் படையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 59 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Crime | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சடலம்

Rahulgandhi | ``ரத்து’’ - ராகுல்காந்திக்கு ஆறுதல்

Sivaganga | School | TN Police | மாணவனுக்கு க*திக்கு*து..! சிவகங்கையில் அதிர்ச்சி

Chennai Arrest | Good Touch, Bad Touch சொல்லி கொடுக்கும் போது தெரிய வந்த அதிர்ச்சி - முதியவர் கைது

Kilambakkam Railway Station| தமிழகமே எதிர்பார்க்கும் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் - எப்போது ஓபன்?