Hydrabad Boy death 
இந்தியா

ரீல்ஸ் மோகத்தால் 14 வயது சிறுவன் பலி - ஐதராபாத்தில் சோகம்

ரீல்ஸ் மோகத்தால் 14 வயது சிறுவன் பலி - ஐதராபாத்தில் சோகம்

thanthitv

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' செய்து புகழ்பெற ஆசைப்பட்ட 14 வயது சிறுவன், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐதராபாத், நாச்சாரம் மல்லாப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மிதுன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் விதவிதமான வீடியோக்களைப் பதிவிடுவதில் மிதுன் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளான். இந்நிலையில், தனது நண்பர்களைப் போலவே தானும் ஒரு 'ரிஸ்க்' நிறைந்த வீடியோவை எடுத்து அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளான். இதற்காக தனது வீட்டின் பால்கனி கைப்பிடிச் சுவர் மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய சிறுவன், மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மிதுன் பரிதாபமாக உயிரிழந்தான். ரீல்ஸ் மோகம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை