இந்தியா

11-ம் வகுப்பு பாடப் புத்தக விலை என்ன..?

11ஆம் வகுப்பிற்கான, புதிய பாட புத்தகங்கள், இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விலை, 110 ரூபாயில் இருந்து, 180 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடப்பாண்டில், ஒன்று, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகங்கள் அமலுக்கு வந்துள்ளன.

மற்ற பாட புத்தகங்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இன்று 11ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதன்படி, தமிழ் பாடம் 150 ரூபாய்க்கும், ஆங்கிலம்-110, கணிதம்-180, இயற்பியல்-160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வேதியியல் பாடம் 160 ரூபாய்க்கும், உயிரி தாவரவியல்-150, உயிரி விலங்கியல்-120, தாவரவியல்-180 ரூபாய்க்கும், விலங்கியல் பாடம் 130 ரூபாய்க்கும், பொருளியல்-150, கணக்குப் பதிவியல்-150, வணிக்கணிதம்-120 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய புத்தகங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, புதிய புத்தகங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

வரலாறு, வணிகவியல் மற்றும் தொழிற்கல்வி பாட புத்தகங்களின் விலையை இன்னும் பாடநூல் கழகம் அறிவிக்கவில்லை

தரமான காகிதத்தில், அதிகமான பக்கங்கள், படங்களுடனும் அச்சிடப்பட்டுள்ளதால் விலை சற்று கூடுதலாக இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி