இந்தியா

ஆந்திரா - தமிழக எல்லையில் லாரி கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

வாணியம்பாடி அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தந்தி டிவி

ஆண் மற்றும் பெண் கூலி தொழிலாளர்கள் 30 பேருடன், ஆந்திர மாநிலம் நாயனூர் பகுதியில் இருந்து மாங்காய் ஏற்றி வந்த சரக்கு லாரி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடிக்கு வந்து கொண்டிருந்த இந்த லாரி, ஆந்திர எல்லை பகுதியான கங்குந்தி அருகே வந்தபோது சாலை ஓரம் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 4 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியது. நள்ளிரவில் நடந்த இந்த பெரும் விபத்தால் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லையில் சோகம் குடிகொண்டது. விபத்து நடந்த பகுதியில் இரண்டு மாநில போலீசாரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இருபது பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Breaking | EB | Harddisk Case | ``அவர் சொல்லி தான் திருடினேன்.. விற்றது 34 ஹார்ட் டிஸ்க்.."

EB Bill Hike | ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வு? - தமிழக மக்களுக்கு முக்கிய செய்தி

Nellai Mu*der Case | நெல்லை ஜங்ஷன் கொலையில் அதிர்ச்சி திருப்பம் - கைதானார் மகன்

TASMAC | Tirunelveli | நெல்லையில் அதிபயங்கரம்.. டாஸ்மாக்கில் அடித்து கொலை.. சிக்கிய கொடூரன்

Nellai Murder | கல்லால் அடித்தே இளைஞர் கொ*ல - கொடூரத்தில் முடிந்த தகராறு.. நெல்லையில் அதிர்ச்சி