செய்திகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

தந்தி டிவி

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...தஞ்சை கொண்டி ராஜ பாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் விஸ்வரூப தரிசனத்தில் மூலவர் பெருமாள் காட்சி கொடுக்க திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திரு வேங்கடமுடையான் பெருமாள் கோயிலில் உற்சவர் பெருமாள் இரு தேவியருடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். வழிபட வந்த பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் ஜடாரி குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்