#engineoil | #hosur | #krishnagiri | #viralvideos | #thanthitv
"மனுஷனே இல்ல தெரியுமா.!" - பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் விநோத நபர் | Engine Oil | Hosur
பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் நபரை, பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்வையிட்டனர்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த 40 வயதான குமார், ஒசூர் பகுதிக்கு வந்த நிலையில், வாகன எஞ்சின் ஆயிலை குடித்துள்ளார். இதை பொதுமக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். கட்டிட தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக எஞ்சின் ஆயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கும் அவர், தனக்கு எவ்வித உடல் உபாதையும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.