செய்திகள்

ரயில் மோதி மாடுகள் உயிரிழப்பு - 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சப்தகிரி விரைவு ரயிலில் மாடுகள் சிக்கி உயிரிழந்ததால், ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற சப்தகிரி விரைவு ரயில் திருத்தணிக்கு வந்தபோது, தண்டவாளத்தில் இருந்த 2 மாடுகள் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இதனால் ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே லெவல் கிராஸிங்குக்கு நேராக ரயில் நின்றதால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர், ரயிலில் ஏறி இறங்கி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

EPS | AIADMK | SPV | "முடியாது.." EPSக்கு பெரும் ஷாக் கொடுத்த SPV, நத்தம் விஸ்வநாதன்

Kulasai | Rocket Launch Pad | தனியார் வசம் செல்கிறதா குலசை ராக்கெட் ஏவுதளம்?

வாயை பொத்தி புதருக்குள் தூக்கி சென்று கொடூரம் - 4th மாணவிக்கு நேர்ந்த வெளியே சொல்ல முடியாத கொடுமை

Chennai Corporation | சென்னையில் 3.49 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்

TN Police | Independence Day | டோட்டலாக கண்ட்ரோல் எடுக்கும் போலீஸ்..சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு