'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் இடம்பெற்றுள்ள "மறுபடியும் நீ..." என்ற பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இப்படத்தின் முதல் பாடலான "மறுபடியும் நீ..." என்ற பாடலின் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடல் நடிகர் சித்தார்த் குரலில் தயாராகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம், காதல் என்ற பிரபஞ்ச சக்திதான் உலகை தன் கையில் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.