சினிமா

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ : யார் சொல்வது உண்மை?

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது அவரின் மனைவி ஜெயஸ்ரீ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சிறையில் இருந்து வந்த கையோடு பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி

திரைத்துறையில் அவ்வப்போது, பலரையும் திரும்பி பார்க்கவைக்க பரபரப்பு நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கை. சின்னத்திரை தம்பதி ஈஸ்வர் - ஜெயஸ்ரீ குடும்ப விவகாரம்தான் தற்போதைய பரபரப்பு.

தன் கணவரான பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் வெளிநாட்டிற்கு சென்று சூதாடி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டார் என்பது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீயின் புகார். அதற்கு ஈஸ்வர் பதிலளித்துள்ளார். இதேபோல மற்றொரு குறிப்பிடத்தக்க புகார் ஈஸ்வர் மகாலட்சுமி என்ற தொலைக்காட்சி தொடர் நடிகையுடன் தொடர்பு உள்ளது என்பது இந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ள ஈஸ்வர் , மகாலட்சுமியின் கணவருடன் ஜெயஸ்ரீக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயஸ்ரீ முன்வைத்த புகார்கள் பூதாகரமாக மாற காரணம், தன் குழந்தை மீதே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் ஈஸ்வர் என்பது தான் இந்த புகாரையும் மறுத்துள்ள ஈஸ்வர் , குழந்தையை மிரட்டி ஜெயஸ்ரீ அவ்வாறு கூற வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகார்கள் அனைத்தும் தன் தந்தை வீட்டை அபகரிக்கவே என கூறியுள்ள ஈஸ்வர் ஜெயஸ்ரீ தன் தந்தையின் சொத்துக்களை ஆக்கிரமிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கணவர் மனைவி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகார் தெரிவித்து வரும் சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்