திரைப்படங்களில் நடிப்பவர்கள் நடிகர்கள் தானே தவிர, அவர்களை தலைவர்கள் எனக் கொண்டாட வேண்டாம் என, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில், 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, பாக்கியராஜ், சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய சீமான், 'சினிமா நடிகர்களை தலைவனாக கொண்டாட வேண்டாம், அவர்கள் நடிகர்கள் தான்' என்றார்.