இந்தாண்டு அஜித்குமார் , நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம்' விஸ்வாசம் '. வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்த விஸ்வாசம் படத்தின் 'கண்ணாண கண்ணே...' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் 'கண்ணாண கண்ணே...' பாடல் யூடியூப்பில்10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.