சினிமா

புது அவதாரம் எடுக்கும் விஜயகாந்த்! மீண்டு வருகிறார் கேப்டன்... எப்படி சாத்தியம்?

தந்தி டிவி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக மீண்டும் வெள்ளித்திரையில் விஜயகாந்த் மகிழ்விக்க இருக்கிறார்...

ஊமை விழிகள்... 1986 ஆம் ஆண்டு வெளியாகி மிரட்டிய க்ரைம் திரில்லர் திரைப்படம்...

பெண்களை கொல்ல வெறிபிடித்த

கண்களோடு புறப்படும் வில்லன்... சூனியக்காரி போன்ற தோற்றத்தில் எச்சரிக்கை மணியடிக்கும் பாட்டி... காலால் தரையில் பள்ளம் தோண்டும் குதிரையென எல்லாம் இரவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மிரள செய்திருக்கும்...

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் எடுத்த திரைப்படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய்காந்த்...

இளைமையிலே முதுமையான கதாபாத்திரத்தை எடுத்திருந்த விஜயகாந்த்... டி.எஸ்.பி.யாக பதிலுக்கு மிரட்டியிருப்பார்

விஜயகாந்த் நடிப்பில் 200 நாட்களை தாண்டி ஓடிய வெற்றிப்படங்களில் ஊமை விழிகளும் ஒன்று...

திரைப்படத்திற்கு கதையெழுதிய ஆபாவாணன், ஊமை விழிகள் பாகம் 2 மற்றும் 3 வெளியாகும் எனவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக விஜயகாந்தை மீண்டும் தத்ரூபமாக திரைக்கு கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபாவாணன் அறிவிப்பை அடுத்து, 1986-களில் மிரட்டியதுபோல்... ஊமை விழிகள் மீண்டும் மிரட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி