சினிமா

அன்று கட்டிப்பிடி வைத்தியம்.. இன்று முத்த வைத்தியம்.. - பாகுபாடு காட்டாமல் வாழும் விஜய் சேதுபதி

நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய கட்டிப்பிடி வைத்தியத்தை விட தற்போது அதிகம் பிரபலாகி வருவது நடிகர் விஜய் சேதுபதியின் முத்த வைத்தியம் தான்.

தந்தி டிவி

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வரும் விஜய் சேதுபதி , நிஜத்தில் மிகவும் யதார்த்தமானவர். விஜய் சேதுபதி சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் , சிறிய சிறிய தோற்றத்தில் நடித்து கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையை மாற்றியது தேசிய விருது வென்ற தென் மேற்கு பருவக் காற்று திரைப்படம் தான்..

சினிமாவில் எந்த நடிகரும் இல்லாத அளவு ரசிகர்களை நேசிப்பவர் விஜய் சேதுபதி , எந்த ரசிகர் முத்தம் கேட்டாலும் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொள்வார். முத்தம் கொடுப்பதற்கான காரணத்தை ஒரு பட வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் விஜய் சேதுபதி.. ஆரம்ப கட்டத்தில் இரண்டு ரசிகர்கள் முத்தம் கேட்டார்கள், நட்பு ரீதியில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்களிடம் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் பழகுகிறேன், முத்தம் கொடுக்கிறேன் என்றார்.

விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி , தன்னுடைய சக நடிகர்களுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ரசிகர்கள் காட்டும் அன்பை தானும் வெளிப்படுத்தவே முத்தம் கொடுக்கிறார் விஜய் சேதுபதி.. இந்நிலையில் தான் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய்க்கு பழக்க தோஷத்தில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியல் ரீதியான கருத்துக்களையும் எப்போதாவது விஜய் சேதுபதி பதிவு செய்வது உண்டு. தன் மீதான விமர்சனத்திற்கு, போய் வேற வேலைய பாருங்கடா என அவர் அளித்த பதிலே, விஜய் சேதுபதி எதையும் அலட்டிக் கொள்ளாத மனிதர் என்பதற்கு சரியான சான்று...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு