Chennai || காலணி அணியாத விஜய் ஆண்டனி - உருக்கமாக பேசிய மனைவி நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி' திரைப்படம் வரும் 20-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி, இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா, விஜய் ஆண்டனி ஏன் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காலணி அணியாமல் வருகிறார் என்பது குறித்து மனம் திறந்து பேசினார். தங்களது மகளை பிரிந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மேடையில் பேசுவதாகக் கூறிய அவர், தங்கள் மூத்த மகள் மீரா மறைவதற்கு முன்பு, கல்லூரிக்குச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட காலணிகளை வாங்கி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். மீரா இறந்த பிறகு, அவை அனைத்தும் வீட்டில் அப்படியே இருப்பதால், தான் இனிமேல் காலணி அணிவதில்லை என விஜய் ஆண்டனி முடிவெடுத்ததாக பாத்திமா தெரிவித்தார். மகள் மீரா கடைசியாக அணிந்திருந்த கைக்கடிகாரத்தை மட்டுமே விஜய் ஆண்டனி தற்போது வரை பயன்படுத்தி வருவதாகவும் பாத்திமா கூறினார். மேலும் மகள் மீராவின் அறையை இன்னும் அப்படியே வைத்திருப்பதாகவும், விரைவில் அதனைத் தங்கள் அறையாக மாற்றவுள்ளதாகவும் அவர் உருக்கமாகத் பேசியது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.