நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் 60வது பட தயாரிப்பாளரான போனி கபூர், தனது இரண்டாவது மகள் குஷிகபூருடன் நியூயார்க் சென்றுள்ளார். எதேச்சையாக அவர்கள் சந்தித்துக் கொண்டது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.