நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 46 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலை வாரி குவித்த வசந்த மாளிகை திரைப்படம், டிஜிட்டல் முறையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கு ஒன்றில், நடிகர் சிவாஜி கணேசனின் 50 அடி உயர கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். வசந்த மாளிகை டிஜிட்டல் திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்று விநியோகஸ்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.