சினிமா

நடிகர் வடிவேலுவுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு : நில தகராறு தொடர்பான பிரச்னையில் சமரசம்

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

தந்தி டிவி

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தாக கூறி நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் மீது பழனியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதிலடியாக, மோசடி செய்ததாகக் கூறி பழனியப்பன் உள்பட இருவருக்கு எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அனைத்து வழக்குகளும் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன் இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை அளிக்கபட்டது.இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்