இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய 800 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகிறது.
ஈழப்போர், முரளிதரன் பந்தை எறிவதாக எழுந்த சர்ச்சை, 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது முரளிதரனை தொடர்புப்படுத்திய காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், எதிர்ப்பு எழுந்ததால் படத்தில் இருந்து விலகினார்.