சினிமா

நடிகர் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் : நாளை முதல் தொடங்குகிறது

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு விநியோகம் செய்யப்படுகிறது

தந்தி டிவி
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதில் தற்போதைய நிர்வாகி, நடிகர் பொன்வண்ணன் தவிர அனைவரும் அதே பொறுப்பிற்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால் தலைமையில் ஒரு அணியும், அவரை எதிர்த்து பிரபல கல்வியாளரும், நடிகருமான ஐசரி கணேசன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறுகிறது. நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சென்னை தி.நகர் நடிகர் சங்க கட்டிடத்துக்கு எதிரே செயல்படும் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு விநியோகம் தொடங்கியுள்ளது. வேட்பு மனு 10 தேதி வரை விநியோகம் செய்யப்படுவதுடன், அன்றைய தினம் வரை வேட்புமனு தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 4 தேதி வேட்புமனு திரும்ப பெறலாம் என்றும், அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் இரண்டு அணிகளுக்கிடையே போட்டி பலமாக உள்ளதால் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி