விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ள நிலையில், அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட்டுகள், அடுத்த 3 நாட்களுக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல், தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ள பாபி தியோல், தொடர்ந்து விஜய் படத்திலும் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.