சினிமா

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் : ஐதராபாத் போலீசார் ரூ.200 அபராதம் விதிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் ராம், பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக, ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தந்தி டிவி

பிரபல தெலுங்கு நடிகர் ராம், பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக, ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ராம் நடித்து வரும், "இஸ்மார்ட் சங்கர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2 நாட்களாக சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று படப்பிடிப்பின் இடைவேளையில், ராம் சிகரெட் பிடித்துள்ளார். இதனை கவனித்த சார்மினார் எஸ்.ஐ. பண்டரி ராம், அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து ராம், உடனடியாக அபராத தொகையை செலுத்தினார். படப்பிடிப்பின் ஒரு காட்சியாக சிகரெட் பிடிக்கப்பட்டது என்று படக்குழு தெரிவித்த நிலையில், போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்