தமிழ் சினிமாவையே அலறவிட்ட Tamil Rockerz; சஸ்பென்ஸ் வைக்கும் டீசர் - பின்னணியில் யார்?
"தமிழ் ராக்கர்ஸ்" வெப் சீரிஸின் டீசர், சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரும் பட்ஜெட் படங்களை திருடி இணையதளத்தில் வெளியிடப்படுவதை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் "தமிழ் ராக்கர்ஸ்". முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கும் இந்த தொடரில், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.