சினிமா

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் - வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக, பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிபதிகள் முன்பு நிலுவையில் உள்ளதால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற, நீதிபதி ஆதிகேசவலு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்