சினிமா

ராட்சசன் 2ம் பாகம் - விஷ்ணு விஷால் விருப்பம்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2ம் பாகத்தை எடுக்க விஷ்ணு விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2ம் பாகத்தை எடுக்க விஷ்ணு விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான கதையை இயக்குனர் ராம்குமார் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று 'ராட்சசன்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இத்தகவலை 'ராட்சசன்' படக்குழுவினர் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முருங்கைக்காய் சிப்ஸ் - பாடல் வெளியீடு

நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவரவிருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் முதல் பாடலான "ஏதோ சொல்ல" என்ற பாடல் யூ டியூபில் வெளியானது. இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடி உள்ளார்.

டாக்டர் படத்தின் 2ம் பாடல் - 20ம் தேதி வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டாக்டர் திரைப்படத்தின் இரண்டாவதாக நெஞ்சமே பாடல் 20ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெளியான செல்லம்மா பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு