பிரபல நடிகை நடிகை மீரா வாசுதேவ் தனது 3-ஆவது கணவர் விபினை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த "உன்னை சரணடைந்தேன்" படத்தில் நடித்தவர் மீரா வாசுதேவன். இவர் ஏற்கனவே இருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். கடந்த ஆண்டு கோவையில் ஒளிப்பதிவாளர் விபினை மூன்றாவதாக திருமணம் செய்த நிலையில், தற்போது அவரையும் பிரிந்து விட்டதாக மீரா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.