சினிமா

மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் தமன்னா

தந்தி டிவி

தமிழ்ல கடைசியா அரண்மனை-4 படத்துல நடிச்சிருந்த தமன்னா, அதுக்கப்புறம் FULL-ஆ இந்தி, தெலுங்குனு சுத்திட்டு இருக்காங்க.

தமிழ்ல நடிக்கலனாலும், அப்பைக்கு அப்ப கேமியோல குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி தன்னோட ஃபேன்ஸை மகிழ்விச்சிட்டு இருக்காங்க தமன்னா..

இப்படி இருக்க, பாலிவுட்ல வனப்பகுதியை மையமா வச்சி பிரமாண்டமா உருவாக்கப்படுற VVAN- FORCE OF FORREST படத்துல ஹீரோயினா கமிட் ஆயிருக்காங்க தமன்னா. இதுக்காக படக்குழு ரிலீஸ் பண்ணியிருக்க ஸ்பெஷல் வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கு.

சித்தார்த் மல்ஹோத்ரா இந்த படத்துல ஹீரோவா நடிக்க, தமன்னாவோட என்ட்ரி இந்த படத்தை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு போயிடுச்சி...

கடைசியா தமன்னா நடிப்புல ஒடேலா-2 படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து டாப்-கியர்ல போயிட்டு இருக்க்காங்க. திருப்பி செம்ம ஹிட் கொடுப்பாங்கனு ஃபேன்ஸ் ஆவலோட காத்திருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்