இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்
(தமன்னாவின் விஷ்வல்களை வைத்து மாண்டேஜ் வைத்துக் கொள்ளவும்
2005 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் தமன்னா திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.
தமிழில் அவர் அறிமுகமான கேடி என்ற திரைப்படம் 2006 செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து கல்லூரி, பையா உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தும் கவனம் ஈர்த்தார் தமன்னா...
நடிகர் விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் என முன்னணி வரிசை நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு இவர் மோஸ்ட் வான்டட் நடிகையானார்..
பாகுபலியில் நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் தமன்னா..
பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த தேவி படத்தில் பேயாக வந்து மிரட்டினார்..
உருக வைக்கும் காதலி கேரக்டர் என்றாலும், மிரட்டும் பேய் கதாபாத்திரம் என்றாலும் கூப்பிடுங்கள் தமன்னாவை எனும் அளவுக்கு இருந்தது அவரின் கேரியர்..
திடீரென ஜெயிலர் படத்தில் காவாலா பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட்டு இளசுகளை ஈர்த்தார் தமன்னா..
கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை தமன்னா ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என புறந்தள்ளப்பட்டவரும் கூட..
ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சினிமா தான் இலக்கு என ஓடிக் கொண்டிருக்கிறார்...
சினிமாவை தாண்டி இப்போது மும்பையில் தன் பெயரில் நகைக்கடை ஒன்றையும் சமீபத்தில் திறந்தார் தமன்னா..
தன்னை சுற்றி சுழலும் சர்ச்சைகள், காதல் சிக்கல்கள் என எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தமன்னா..