ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த இந்த திரைப்படம் திரையரங்குகள் மூடலால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.