சினிமா

சூர்யாவின் புதிய திரைப்படம் "ஜெய் பீம்".. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய் பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சூர்யாவின் புதிய திரைப்படம் "ஜெய் பீம்".. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய் பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை பெயரை தலைப்பாக வைத்துள்ளதோடு, வக்கீலாக சூர்யா நடிப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி படு பிஷியாக உலா வருகிறார் சூர்யா.ஏற்கனவே வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் படங்களின் அறிவிப்புகளை கொடுத்து கவனத்தை ஈர்த்த சூர்யா, பிறந்த நாள் ட்ரீட்டாக ஜெய் பீம் என்ற படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.ஜெய் பீம் பர்ஸ்ட் லுக் வெளியானது முதலே சூர்யாவின் பாத்திரமும், அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்த பாத்திரங்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் முழுப்பெயர், பீமாராவ் அம்பேத்கர். அவரை போற்றும் மக்கள் ஜெய் பீம் என சொல்வது வழக்கத்தில் உள்ளது. ஜெய் பீம் என்றால் அம்பேத்கர் வாழ்க... என்று பொருள். குரலற்றவர்களின் குரல் நான் என முழக்கமிட்டு செயல்பட்டவர் அம்பேத்கர் என்பதால், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கியவரும், பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி என்ற திரைப்படத்திற்கு வசனம் இழுதியவருமான த.செ.ஞானவேல் தான், ஜெய் பீம் படத்தை இயக்க உள்ளார். ஜெய் பீம் என்ற டைட்டில் வைத்ததும், முதன்முறையாக வக்கீல் வேடத்தை ஏற்று சூர்யா நடிப்பதும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளோம் என வெற்றிமாறன் கூறியுள்ள நிலையில், அம்பேத்கர் பெயரை வைத்து உருவாக உள்ள ஜெய் பீம் படம் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை பற்றி பேசப்போகும் படைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவதா? என குரல் எழுப்பியது முதல் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு? ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு என பொது வாழ்க்கையில் சமூகம் சார்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் சூர்யா, சினிமாவிலும் சமூகம் சார்ந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து இந்திய சினிமாவின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார் சூர்யா..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி