சினிமா

தடைகளை தாண்டி வெளிவரும் "காப்பான்" - நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இன்று திரைக்கு வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இன்று திரைக்கு வருவதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள காப்பான், திரைப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தை ஆகஸ்ட் 30 வெளியிட திட்டமிட்ட நிலையில், செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டது.

இதற்கிடையே காப்பான் திரைப்படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரனைக்குப் பின் சார்லஸ் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சார்லஸ் மேல் முறையீடு செய்திருந்தார்,

வழக்கினை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ