சினிமா

மாசாணியம்மன் கோயிலில் நடிகர் சூர்யா.. திருப்பதியில் ஜோதிகா சாமி தரிசனம் - காரணம் என்ன?

தந்தி டிவி

நடிகர் சூர்யாவின் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் சூர்யாவை வரவேற்று சால்வை அணிவித்தும் மாசாணியம்மன் படத்தை வழங்கியும் கவுரவித்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, படத்தின்கதை மற்றும் படப்பிடிப்புக்கான கேமரா வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இரவு திருப்பதி சென்ற அவர், அதிகாலை கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்