தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்களை நடிகர் சுரேஷ் கோபி பகிர்ந்துள்ளார். பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. குருவாயூரில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர். இப்புகைப்படங்களை சுரேஷ் கோபி தற்போது பகிர்ந்துள்ளார்.