சினிமா

சூர்யா-ஜோதிகா வழியில் கார்த்தி - OTT-யில் வெளியாகிறது 'சுல்தான்' ?

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இம்மாத இறுதியில் OTT-யில் வெளியாக உள்ள நிலையில், கார்த்தியின் சுல்தான் திரைப்படமும் OTT-யில் வெளியாகுமா என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தந்தி டிவி

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படங்களில் முக்கியமான படமாக இருந்தது. சிங்கம் 2 படத்திற்கு பிறகு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக சூர்யாவுக்கு இந்த படம் அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் கோடை விடுமுறையில் வெளியாக வேண்டிய இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், சூரரைப்போற்று OTT-யில் வெளியாகும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. சூர்யாவின் இந்த முடிவு , திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி படத்தை பெரிய திரையில் கொண்டாட்டங்களுடன் காண காத்திருந்த ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால், ஒரு தயாரிப்பாளராக இந்த முடிவுக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் மூலமாக கிடைத்த வருவாயில் 5 கோடி ரூபாயை பொதுமக்கள் , திரையுலகை சேர்ந்தவர்கள் உட்பட கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவித்ததையடுத்து ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த படம் மூலம் இன்கேம் இன்கேம் காவாலி புகழ் ரஷ்மிகா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கடந்த ஆகஸ்டு மாதமே படத்தின் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். குடும்பங்கள் கொண்டாடும் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக சுல்தான் இருக்கும் எனவும் பண்டிகை நாளில் படத்தை வெளியிட எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார்.

தற்போதைய சூழலில் தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படுவது சாத்தியமா என சந்தேகம் இருப்பதால், சூரரைப் போற்று படத்தை போல் சுல்தானும் OTT-யில் வெளியாக போகிறதா என்ற பேச்சு எழுந்துள்ளது.

முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT-யில் வெளியான போது இனி சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களும் சூர்யாவின் படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

தற்போது சுல்தான் OTT-யில் வெளியாகும் என அறிவிப்பு வந்தால், திரையரங்க உரிமையாளர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி