சினிமா

மீண்டும் புயலை கிளப்பிய சுசித்ரா.. கடுப்பான கார்த்திக் குமார்

தந்தி டிவி

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தொடர்ந்து தம்மைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக பாடகி சுசித்ரா மீது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த தனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக சுசித்ரா மீது நடிகர் கார்த்திக் குமார் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் தன்னை பற்றி சமூக வலைதளத்தங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா தெரிவித்து வருவதாக கார்த்திக் குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் செல்லாததால் வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்