புயல் நிவாரண பணிக்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய நடிகர் சூரிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு துணை நிற்கும் வகையில், பலரும் நிதி அளித்து வருவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். அந்த வகையில், நடிகர் சூரி தனது உணவகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.