சினிமா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு - ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் 23-ஆம் தேதி நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம் எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குப் பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது, வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்