தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்சி சங்கம் சார்பில் வடபழனியில் நடந்த மே தின கொண்டாட நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய அவர், சினிமா தொழிலாளர்களின் உழைப்பால் தான் ஹீரோக்களுக்கு பாராட்டுகள், கைதட்டல்கள் குவிவதாக பெருமிதம் தெரிவித்தார்