சினிமா

சிம்புவுக்கு திருமணம் செய்ய டி.ரா​ஜேந்தர் தீவிரம் - சர்ச்சைகளால் தாமதமாகும் சிம்பு திருமணம்

37 வயதை தாண்டிவிட்ட நடிகர் சிலம்பரசன் என்ற சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

சிம்புவை சுற்றி வலம் வந்த சர்ச்சைகளே அவரது திருமணம் தாமதம் ஆவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது..

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவிற்கும் - நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி வந்த இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் பிரிந்தனர்.

அதன் பின்னர் , வாலு படத்தின் போது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு.

திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகிய நிலையில் , திடீரென சிம்புவும் - ஹன்சிகாவும் பிரிந்துவிட்டனர் . இதற்கு ஹன்சிகாவின் தாயார் தான் காராணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது

பட சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை , அரைகுறையாக படபிடிப்பு நடத்தி படத்தை வெளியிட்ட காரணத்தால் கோடிக்கணக்கில் படங்கள் நஷ்டமானது என சிம்புவிற்கு எதிராக, தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனிடையே, ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டிய சிம்பு, இமயமலை , சபரிமலை என பயணிக்க தொடங்கினார்.

37வயதை தாண்டிவிட்ட சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்

இந்தநிலையில், சிம்புவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார் சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர்...

காஞ்சிபுரம் குப்தா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ஆண்டவன் என்றால் அர்ச்சனை இருக்கும், மனிதன் என்றால் பிரச்சினை இருக்கும் என்றார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு