சினிமா

ரூ.1400 கோடி... ஸ்ரேயா கோஷலுக்கும் ட்ரூ காலருக்கும் இப்படி ஒரு பந்தமா..? - வெளியான அசத்தல் தகவல்

தந்தி டிவி

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவரான சிலாதித்யா, ட்ரூ காலர் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மட்டுமன்றி இந்திய திரைத்துறையில் பிரபல பாடகியாக வலம் வரும் அவர், 2015ல் சிலாதித்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021ல் மகன் பிறந்தார். இந்நிலையில் ட்ரூ காலர் செயலியின் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக பதவி வகிக்கும் நிலையில், இந்த செயலியை சுமார் 374 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் உயரத்தை நோக்கி செல்லும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள பலரும் ஆயிரத்து 400 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி வகிக்கும் ஸ்ரேயா கோஷலின் கணவரை பாராட்டி வருகின்றனர்.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!