சினிமா

கணவன், மனைவியாக வாழ்ந்த சீரியல் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்.. காதலனை பிடித்து இழுத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்து மோசடி செய்ததாக காதலன் மீது பிரபல சின்னத்திரை நடிகை காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொடர் ஒன்றில் நடித்து சின்னத்திரை நடிகை ஒருவர், இன்ஸ்டாகிராமிலும் பிரபலமானவர்...

இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்..

சின்னத்திரை நடிகையான தான், சூளைமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ஏற்பட, நாளடைவில் அது காதலாக மாறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி இருவரும் கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக புகாரில் கூறியுள்ள அவர், சந்தோஷ் மீதான அதீத காதலால் அவர் கேட்கும் போதெல்லாம் பணம், நகைகளை கொடுத்து உதவியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

நாளடைவில் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால், அது குறித்து அவரிடம் கேட்ட போது முறையாக பதிலளிக்காமல் தட்டிக்கழித்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், தன்னிடம் இருந்து வாங்கிய 6 லட்சம் ரூபாய் பணம், 2 சவரன் தங்க நகைகளை திருப்பி தருமாறு கேட்டதற்கு, சந்தோஷ் மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதோடு, தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் சந்தோஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை புகாரின் பேரில், சந்தோஷை கைது செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

TN Election | AIADMK | அடுத்தகட்ட பட்டியல் தயார்? - அரசியல் களத்தை தலைகீழாக திருப்பிய EPS

TN Election | AIADMK | "தனிப்பட்ட செல்வாக்கு இருக்கும்" - உடைத்து பேசிய சுமந்த் சி

TN Election | AIADMK | தொகுதி மாறிய முக்கிய புள்ளி-"ஏ.வ.வேலு மகனை சமாளிக்க முடியாமல்.."-உடைத்த ரமேஷ்

ADMK Candidate List | ஜெ. பாணியில் ஈபிஎஸ் அதிரடி - தொகுதி மாறிய முக்கிய VIP-க்கள்

ADMK Candidate List | தமிழகமே எதிர்நோக்கிய வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டது அதிமுக