சினிமா

புகையால் பாதிக்கப்பட்ட உலக "சர்க்கார்"கள்

புகைப்பிடித்தல் புற்று நோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும் என எல்லா சினிமாக்களிலும் முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தந்தி டிவி

புகைப்பிடித்தல் புற்று நோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும் என எல்லா சினிமாக்களிலும் முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது. புகைக்கும் காட்சிகள் வந்தாலும் திரை ஓரத்தில் எச்சரிக்கை வாக்கியம் வைக்கப்படுகிறது. ஆனாலும் சினிமா ஹீரோக்கள் புகையை நிறுத்துவதில்லையே. ஸ்டைல் என்றும் கெத்து என்றும் சொல்லிக் கொண்டு ஹீரோக்கள் புகை பிடிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாக மாறிவிடுகிறது. நம் தமிழ் சமூகத்தில் புகை பிடித்து சமூகத்தைக் கெடுக்கிறார்கள் என்ற விமர்சனம் உச்சபட்ச நடிகர்கள் மீது கூட உண்டு.பிரபலமானவர்கள் புகை பிடிப்பதும் அவரைப் பார்த்து உலகம் கெட்டுப் போவதும் இங்கு மட்டுமல்ல. எல்லா நாட்டிலும் நடக்கிறது. உலகுக்கே பரிச்சயமான ஸ்டைல் ஹீரோ என்றால் அது ஜேம்ஸ் பாண்ட்தான். ஜேம்ஸ் பாண்ட் என்ற கதா பாத்திரமே ஒரு புகைப் பழக்க அடிமையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த Roger-Moore நிஜமாகவே செயின் ஸ்மோக்கர். இதன் விளைவாக அவரின் நுரையீரல் முற்றிலுமாக நோய் வாய்ப்பட்டது. நல்ல வேளையாக அது கேன்சராக மாறவில்லை. ஆனாலும் prostate cancerரால் அவர் இறந்து போனார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பலரும் புகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரசரான ஏழாம் எட்வர்டு புகைப்பிடிப்பதை ஸ்டைல் என நம்பினார். ஒரு நாளைக்கு இவர் 32 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவாராம். இதனால் இவர் தனது 69வது வயதில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் 1936 ஆம் ஆண்டு இறந்தார். எண்ணற்ற நுரையீரல் நோய்களால் அவதிப்பட்ட இவர், இறக்கும் வரையிலும் கூட புகையை விடவே இல்லை. ஐந்தாம் ஜார்ஜின் மகனான எட்டாம் எட்வர்டும் புகைக்கு பலியானவர்தான். குரல்வளையில் ஏற்பட்ட புற்று நோயால் இவர் மிகவும் அவதிப்பட்டு இறந்தார்.எட்டாம் எட்வர்டின் சகோதரரான ஆறாம் ஜார்ஜும் கூட சிகரெட் என்றால் உயிரை விடுவார். இவரும் சிகரெட்டால்தான் உயிரை விட்டார். 56 நுரையீரல் புற்றுநோய் இவரை பலி வாங்கிவிட்டது.

உளவியல் பற்றி பேசினாலே எல்லோரும் உதாரணம் சொல்லும் பெயர் சிக்மண்ட் ஃப்ராய்டு. நவீன உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் இவர், தொடர்ந்து சிகரெட் பிடித்தவர். தாடையில் ஏற்பட்ட புற்று நோயால் இவர் மரணத்தைத் தழுவினார்.குழந்தைகள் அனைவரும் அறிந்திருக்கும் பெயர் Walt Disney. இன்றைய டிஸ்னி பிக்சர்ஸின் பிதா மகன். மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி கார்டூன் புரட்சி செய்தவர். இவரும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிப்படையில் பல குரல் நிபுணரான டிஸ்னி, தொடர் இருமலால் அந்தப் பணியையே விட்டார். கடைசியில் புகை, நுரையீரல் புற்று நோய் மூலம் அவர் உயிரைப் பறித்தது. இந்த சோகத்தால் தானோ என்னவோ, இன்றைய டிஸ்னி பிக்சர்ஸ் தனது சினிமாக்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளை அனுமதிப்பதில்லை என கொள்கை வைத்திருக்கிறது. வால்ட் டிஸ்னியின் பழைய புகைப்படங்களில் கூட அவர் கையில் சிகரெட் இருக்கக் கூடாது என போட்டோ ஷாப் செய்து வைக்கிறார்கள். அதுதான் சினிமாவின் சக்தியை உணர்ந்த நிறுவனம்..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி