பிரபல நடிகை சமந்தா தனது ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருமலையில் பாத யாத்திரை மேற்கொண்டார். கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்துள்ளார். ஜானு என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் பாதயாத்திரை செய்து படம் வெற்றி பெற சமந்தா வேண்டிகொண்டார். இதை கண்ட பக்தர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டனர்.