சினிமா

``நான் சும்மா விடவே மாட்டேன்’’ - அரண்டு கிடக்கும் கோலிவுட், டோலிவுட்.. பகீர் அறிவிப்பு

தந்தி டிவி

நடிகை சமந்தா விவாகரத்திற்கு சந்திரசேகர ராவின் மகன் ராமராவ் தான் காரணம் என்ற அமைச்சரின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் திரைத் துறையிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான கேடிஆர், அமைச்சர் சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன்னுடைய வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்... மன்னிப்பு கேட்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுரேகா, கடந்த காலங்களில் கேடிஆர் தன்னை சிறுமைப்படுத்தி பேசியதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து அந்த நிகழ்ச்சியில் அப்படி பேசி விட்டதாகவும், தனது பேச்சு ஒரு குடும்பத்தை முழு அளவில் காயப்படுத்தும் என்பதை தான் கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்ததுடன், தன்னுடைய அந்த பேச்சை நிபந்தனை இல்லாமல் திரும்ப பெற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்... ஆனால் தன்னைப் பற்றிய பேச்சுக்களுக்கு கே.டி.ஆர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை அவரை விடமாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார் சுரேகா..

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி