சினிமா

Salman Khan case | கோர்ட் படி ஏறிய சல்மான் கான்..அதிரடியாக வந்த உத்தரவு

Salman Khan case | கோர்ட் படி ஏறிய சல்மான் கான்..அதிரடியாக வந்த உத்தரவு

thanthitv

Salman Khan case | கோர்ட் படி ஏறிய சல்மான் கான்..அதிரடியாக வந்த உத்தரவு கலைமானை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது, தொடரப்பட்ட வழக்கின் பின்னணியில் உருவான பாலிவுட் பட டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சல்மான் கான் 1998-ம் ஆண்டு கலைமான் வேட்டை வழக்கின் பின்னணியில், பாரத் எஸ். ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘காலா ஹிரன்: தி பேட்டில் ஃபார் லெகசி“ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது.இதையடுத்து, சல்மான் கானின் ஆளுமை உரிமைகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், அவருடன் தொடர்புடைய சம்பவங்களை தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கவும், திரைப்பட வெளியீட்டைத் தடுக்கக் கோரிய சல்மான் கான், தன்னைப் பற்றிய இதுபோன்ற சித்தரிப்புகள் ஆட்சேபனைக்குரியவை என தெரிவித்துள்ளார்.உண்மைச் சம்பவங்கள் குறித்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் திரைப்படம் இருப்பதாக சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், படத்தின் விளம்பரங்களில் தன்னை நேரடியாகக் குறிக்கும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.துப்பாக்கியுடன் சித்தரிக்கப்பட்ட படத்தின் போஸ்டர் நீதிமன்றப் பதிவுகளுக்கு மாறான, தவறான தகவலைப் பரப்புவதாகக் கூறி சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது .இந்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் விசாரித்த நிலையில், மூத்த வழக்கறிஞர் ரவி பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் நிஜாம் பாஷா, உள்ளிட்டோர் சல்மான் கான் தரப்பில் ஆஜராகினர்.தயாரிப்பாளர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதுபோன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறி, கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வாய்மொழியாக தெரிவித்தது. ஒருமுறை இழந்த நற்பெயரை மீண்டும் பெற முடியாது” எனக் கூறிய நீதிமன்றம், வழக்கின் பின்னணியில் உருவானதாகக் கூறப்படும், ‘காலா ஹிரன்“ திரைப்படத்தின் டீசர் மற்றும் தயாரிப்பாளர் பேட்டிகளை நீக்க உத்தரவிட்டது

BREAKING || Accident |விடிந்ததும் கேட்ட மரணஓலம்..உடல் நசுங்கி 2 பேர் பலி-உயிருக்கு போராடும் 10 பேர்

CM Vijay | TN Govt | CMO | அடியோடு மாற்றம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

TN Govt | CMVijay | Tamilnadu | தமிழக வருவாயை பெருக்க குழு அமைப்பு - அரசாணை

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்