சினிமா

தனது காதல் வாழ்க்கை குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா

தந்தி டிவி

கீதா கோவிந்தம் படம் மூலம் பரிட்சயமான ராஷ்மிகா மந்தனா, பான் இந்தியா படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்...

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் அவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது..

இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த போதிலிருந்தே காதல் வயப்பட்டதாக பேசப்பட்டது...

அதற்கேற்றார் போல் இருவரும் ஒரே இடத்தில் இருந்தபடி தனித்தனி புகைப்படங்களை வெளியிடுவது...ஒரே நேரத்தில் வெகேஷன் செல்வது என கிசுகிசுக்களுக்கு தீனி போட்டு வந்தனர்.

இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் ஒரே வீட்டில் வசித்து வரும் இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் பரவியது..

இதுகுறித்து இருவரும் மௌனம் காத்து வந்த நிலையில், புஷ்பா ப்ரமோஷனில் ஓபனாக தன் காதல் குறித்து பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா...

சென்னையில் நடந்த விழாவில், தமிழிலேயே பேசிக் கொண்டிருந்த ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வியை முன்வைத்தார்..

அவர் காதல் வாழ்க்கை குறித்தும், உங்களை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் சினிமாத் துறையில் இருக்க வேண்டுமா அல்லது வேறு துறையை சேர்ந்தவரா ? என கேள்வி எழுப்பினார்..

அதற்கு இது எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று தான் எனக்கூறி வெட்கப்பட...விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா மற்றும் அல்லுஅர்ஜுன் பலரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

இருப்பினும் யார் என பெயர் கூறாமலே வெட்கப்பட்ட அவர், மழுப்பலான பதிலுடன் தனது உரையாடலை முடித்துக் கொள்ள அரங்கமே ஆர்ப்பரித்தது...

இப்படி மழுப்பலான பதிலளித்திருந்தாலும், விஜய் தேவரகொண்டா குறித்து அவர் பேசுவதாக ரசிகர்கள் கூறி வர, விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கின்றனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்